search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார கேடு"

    ஆவடி நகராட்சி பகுதிகளில் குப்பைகள் குவிந்து சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது.

    ஆவடி:

    ஆவடி நகராட்சியில் ஆவடி, பருத்திப்பட்டு, விளிஞ்யம்பாக்கம், திருமுல்லைவாயல், தண்டுரை, சேக்காடு, அண்ணனூர், பட்டாபிராம், கோவில்பாதாகை, மிட்டின மல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகள் உள்ளன.

    இங்கு சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினமும் நகராட்சி பகுதிகளில் சுமார் 140 டன் குப்பைகள் சேர்கின்றன.

    இவ்வாறு நகராட்சி முழுவதும் 4200டன் குப்பைகள் மாதந்தோறும் சேருகின்றன. குப்பைகளை 170 நகராட்சி ஊழியர்கள் மற்றும் 700 ஒப்பந்த ஊழியர்கள் அள்ளி வருகின்றனர். மேலும், அந்த குப்பைகளை ஊழியர்கள் சேக்காட்டில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நகராட்சி பகுதிகளில் குப்பைகள் சரி வர அள்ளப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “முக்கிய சாலைகள், தெருக்களில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. பல இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறைந்து வழிகிறது.

    அந்த குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் சிதறி கிடக்கின்றன. அச்சாலைகளில் வேகமாக வாகனங்கள் செல்லும் போது குப்பைகள் காற்றில் பறந்து கடைகள், வீடுகளுக்குள் விழுகிறது.

    சாலை, தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகிவருகிறது.

    தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சிய போக்கால் ஆவடி நகராட்சி பகுதிகளில் குப்பைகள் குவிந்து சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் மெத்தனமாகவே உள்ளனர். இது தொடர்பாக பொது நலச்சங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல முறை புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை.

    எனவே, நகராட்சி உயர் அதிகாரிகள் குப்பைகளை உடனுக்குடன் அள்ளவும், சுகாதார சீர்கேட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திறந்த வெளியில் மலம் கழித்தால் அபராதம் விதிக்கப்படும் என தொண்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி கடற்கரை பகுதியாகவும், வளர்ந்துவரும் நகரமாகவும் மாறி வருகிறது. இருப்பினும் இப்பகுதி மக்களிடையே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு குறைவாக காணப்படுகிறது.

    திறந்த வெளியில் மலம் கழிப்பதனால் வரும் கேடு பற்றி அறிவிப்பு பலகைகள் மூலம் நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்திவருகிறது.

    அதன்படி திறந்தவெளியில் மலம் கழித்தால் ரூ.50 முதல் ரூ.100 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

    மேலும் தொண்டி பேரூராட்சி பகுதியினை திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத நகரமாக மாற்ற தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தின் கழிப்பறை கட்ட ஊக்குவிக்கப்பட்டு கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு ரூ.8000 மானியம் வழங்கி கழிப்பறை கட்ட அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அனைத்து குடியிருப்புகளுக்கும் கழிப்பறை கட்டி பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தவிர கிராமப்புற பகுதிகளில் 5 சமுதாய பொது கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பொது மக்களின் கோரிக்கையின் படிகுளிக்கும் ஊரணியான அன்னி உத்து ஊரணி அருகிலும், வட்டாணம் ரோடு அருகிலும் பொது கழிப்பறை திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டு அனுமதியை எதிர்பார்த்துள்ளோம் என்று செயல் அலுவலர் மாலதி தெரிவித்தார்.

    அதேபோல் ஆர்.எஸ். மங்கலம் என்று அழைக்கப்படும் ராஜ சிங்கமங்கலம் பேரூராட்சியிலும் திறந்த வெளியில் மலம் கழித்தால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். #tamilnews
    ×